உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்க இடைத் தேர்தல் – எதிர்க்கட்சி முன்னிலை


அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் இதுவரை வெளியான முடிவுகளில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. நேற்றையதினம் நடைபெற்ற இந்த இடைக்கால தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு செனட் சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த 436 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் இந்தத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலுக்கு சமமான தேர்தலாக கருதப்படுகிறது. மேலும் 36 மாகாணங்களுக்கான ஆளுனர்களும் இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அந்தவகையில் இந்த தேர்தல் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த கூடியதாக கருதப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் படி எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 194 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சி 174 இடங்களை பிடித்துள்ளது. இதன் மூலம் டிரம்புக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிரம்பின் ஆட்சி நிறைவுபெற இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் புதிய சட்டங்கள் கொண்டு வருவதற்கு இந்த உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை செனட் சபை தேர்தலில் 100 இடங்களில் 51 இடங்களில் டிரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்கவைத்துள்ளது என்பதும் குறிப்பித்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers