பிரதான செய்திகள் விளையாட்டு

உலகக்கோப்பையில் 8 விக்கெட் வீழ்த்திய லொயிட் போப் , சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் ஒப்பந்தம்


19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் 8 விக்கெட் வீழ்த்திய அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளரான லொயிட் போப்(Lloyd Pope)  , பிக்பாஷ் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். நியூசிலாந்தில் இந்த வருடம் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளரான போப் சிறப்பாக விளையாடியிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 35 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். அத்துடன் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் குயின்ஸ்லாந்து அணிக்கெதிராக விளையாடி 87 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெடடுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில் இளம் வீரரான லொயிட் போப்பை , பிக்பாஷ் தொடரில் விளையாடும் சிட்னி சிக்சர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.