இலங்கை பிரதான செய்திகள்

யாழில் வீதிப்போக்குவரத்து நடைமுறை தொடர்பான மீளாய்வுக்கூட்டம்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

யாழ்ப்பாணத்திலுள்ள வீதிப்போக்குவரத்து நடைமுறை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாண காவற்துறைப் பிரிவு சிரேஸ்ட் காவற்துறை  அத்தியட்சகர் வர்ணஜெயசுந்தர தலைமையில் யாழ்ப்பாணம் காவற்துறை நிலைய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் பொதுமக்களால் சட்டவிரோதமான முறையில் புகையிரத கடவைபாதை அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுவருகின்றன இவற்றை உடனடியாக அகற்றுவதற்கு, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து,நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் 5 சட்டவிரோத ரயில்வே கடவைகளை அகற்றுமாறு சிரேஸ்ட் காவற்துறை அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்தோடு இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட சுமார் 30 இடங்களில் வீதி சமிஞ்ஞை கோடுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்படவேண்டும்.அவ்வாறு அமைக்கப்படின் ஏற்படும் வீதிவிபத்துக்களை குறைக்கமுடியம் எனவும்,குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விபததுக்கள் அனைத்தும் பிரதான வீதிக்கும்,பிரதான வீதிகளை இணைக்கும் இணைப்புவீதிகளிற்கும் அண்மையிலேயே இடம்பெறுகின்றன எனவும் சிரேஸ்ட் காவற்துறை அத்தியட்சகர் சுட்டிக்காட்டியதோடு,விபத்துக்களை தடுக்கும் முகமாக உடனடியாக வீதி சமிஞ்ஞை கோடுகள் அமைப்பதை செயற்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

இதேவேளை யாழ்ப்பாண நகரின் ,ஸ்டான்லி றோட் மற்றும் மின்சார நிலைய வீதிகளில் காணப்படும் வீதி நெரிசல்களை கட்டுப்படுத்தும் முகமாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் யாழ்ப்பாணப் பொலிஸாரும் இணைந்து நெரிசலை கட்டுப்படுத்துவதாகவும் இன்றைய தினம் முடிவெடுக்கப்பட்டது.அத்தோடு,சனநெரிசலான வீதிகளில்,போக்குவரத்து காவற்துறையிரை நாளைய தினத்தில் இருந்து கடமையில் ஈடுபடுத்துவதெனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு கடந்த 30 வருடகாலமாக போர் நடைபெற்ற இடம் என்பதால் தற்போது யாழ்.குடாநாட்டில் வாகன பாவனை அதிகரித்து வருகின்றது. ஆனால் யாழ்.குடாநாட்டில் இடப்பற்றாக்குறை நிலுகின்றது குறிப்பாக யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் 27 போக்குவரத்து காவற்துறைரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட் காவற்துறை அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர குறிப்பிட்டார்.

காலை,மாலை வேளைகளில் பாடசாலை மற்றும் பொது இடங்களில் எமது காவற்துறையினர் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுவருகின்றார்கள். எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து யாழ்ப்பணத்தில் நிலவும் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை காணவேண்டும் எனவும் வர்ணஜெயசுந்தர இதன்போது வலியுறத்தினார். மேலும் யாழ்ப்பாணம்,மருதனார்மடம்,மானிப்பாய் பகுதிகளில் வீதி சமிஞ்ஞை விளக்குளை பொருத்த நடவடிக்கை எடுப்பதாகவும் சிரேஸ்ட் காவற்துறை  அத்தியட்சகர் தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம் வர்த்தக சங்க பிரதிநிதிகள்,தனியார்,அரச பேருந்து சங்க பிரதிநிதிகள்,முச்சக்கர வண்டி சங்கத்தினர் மற்றும் இலங்கை மின்சாரசபை,வீதிஅபிவிருத்தி அதிகார சபையினர், யாழ்.மாநகரசபை பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாணப்காவற்துறை  பிரிவுக்குட்பட்ட பொலிஸ்நிலையங்களின் போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers