Home இலங்கை சுமந்திரன் பற்றி மைத்திரிக்கே கவலையில்லை எங்கட ஆட்கள் ஏன் முறுகினம்….

சுமந்திரன் பற்றி மைத்திரிக்கே கவலையில்லை எங்கட ஆட்கள் ஏன் முறுகினம்….

by admin

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளில் சரிகள், பிழைகள் இருக்கலாம். அது மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவருக்கு எதிரான கருத்துக்கள் தற்போது திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்பட்டு வருவதனை ஏற்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கட்சியிலிருந்து விலக்க வேண்டுமென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு கடிதம் அனுப்பியிருந்தமை தொடர்பில் வினாவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்..

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் தொடர்பில் சுமந்திரனுக்கு ஆதங்கம் இருப்பது இயற்கையானது தான். ஆனால் அந்த ஆதங்கத்தை நாகரீகமாக அல்லது அந்த சில வார்த்தகைளைத் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கின்றது.

அதே போன்று சுமந்திரனுடன் இணைந்து அந்த வேலைகளில் நானும் சம்மந்தப்பட்டிருக்கின்றேன். ஆகவே இவ்வாறு பல வழிகளிலும் செயற்பட்ட போது ஐனாதிபதியின் செயற்பாடுகளைப் பார்க்கையில் ஆதங்கம் ஏற்படுவது இயற்கையானது.

அந்த வகையில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது சுமந்திரன் தன்னுடைய அரசியல் வாழ்கையை இனப்பிரச்சனைக்கான தீர்வும் அரசியலமைப்பு மாற்றத்திலும் ஈடு வைத்தவர் என்று கூட சொல்லலாம். ஏனெனில் இதுநடைபெறாவிட்டால் அரசியலிலிருந்தே ஒதுங்கிக் கொள்வேன் என்று கூட சொல்லியிருக்கின்றார்.

அந்த அளவிற்கு அவர் அரசியலமைப்பு முன்னேற்றத்தை நேசித்துச் செயற்பட்ட ஒருவர் சுமந்திரன். அதை ஏழாம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட இருந்த நிலையில் அதனைக் குழப்புகின்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி பாராளுமன்றத்தை ஒத்தி வைத்திருப்பது ஏற்றுக் கொள்ளப்படாத விடயம் தான்.

ஐனாதிபதியின் இந்தச் செயற்பாடு உணர்ச்சி வசப்படக் கூடிய விடயம் தான். ஆகவே அந்த அடிப்படையில் அவர் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கின்றார். ஆனால் அந்தச் சொற்பிரயோகக்ங்களைத் தவிர்திருக்கலாம். ஆனால் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.

மற்றது கட்சியில் இருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டுமென சிவசேனை தலைவர் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அவர் ஏற்கனவே கூட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லி வந்திருக்கின்றார். சிவசேனைக்கும் இதுக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்க தேவையில்லை அது ஏற்றுக் கொள்ள முடியாது. நியாயயம் இல்லை. அவருடைய கோரிக்கையை கட்சிப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது..

இதே வேளை இது ஐனாதிபதிக்கு எதிராகச் சொன்ன கருத்து அவர் ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இது குறித்து பெரிதாக எதனையும் கூறவில்லை. ஆனால் எங்கட ஆட்கள் தான் அவ்வாறு பேசினது பிழை. நாகரீகமல்ல, வழக்கு வைக்க வேண்டும். என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அந்தப் பகுதியில் இருந்து அதாவது ஐனாதிபதி தரப்பில் இருந்து அவங்கள் எதனையும் கூறவோ அல்லது கேட்கவும் இல்லை. அவர்கள் இதனை பெரிதாக எடுக்கவில்லை ஆக எங்கட ஆட்கள் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இந்த விடயத்தை பூதூரமாக்கி அவருக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றனர். உண்மையில் அவருடைய செயற்பாடுகளில் சரி பிழைகள் இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை.

ஆனால் இந்த விடயத்தில் இதனை இவ்வளவு பெரிய பூதாரமாக்கி அவரை நீக்க வேண்டும் வழக்குப் போட வேண்டுமென்று சொல்லுற அளவிற்கு சுமந்திரன் அப்படியான ஒரு பிழையும் செய்யவில்லை. ஆனால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்றதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஒழுக்கம் என்பது ஒப்பிட்டு ரீதியான விடயம். அதனை சமூகம் தான் தீர்மானிக்கும். தமிழரசுக் கட்சியபை; பொறுத்தரைவயில் ஊழல் மோசடியில்லாத உறுப்பினர்களைக் கொண்ட பெறுமதி வாய்ந்த கட்சியாகவே உள்ளது. அதனை எல்லோரும் புரிந்து கொள்ள வே;ணடும்.அவ்வாறு ஒழுக்கத்துடனே உறுப்பினர்கள் எப்போதும் செயற்பட்டு வருபவர்கள் என்றார்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் சாதூரியமானது..

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் சாதூரியமானதும் வரவேற்கத்தக்கதுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அச் சந்திப்பில் மேலும் தெரிவித்தாவது:- ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளால் நாட்டில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. அரசியலமைப்பை மீறிய இச் செயற்பாட்டிற்கு பல தரப்பினர்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஆகையினால் நாட்டில் ஜனநாயகத்தை பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்படுகின்றது.

ஆனால் நாட்டில் நலனில் சிறுபான்மைக் கட்சிகளுக்கு அக்கறையில்லை என்ற பொதுவான கருத்து முன்வைக்கப்பட்டு வந்தாலும் அதிலிருந்து வேறுபட்டு நாட்டின் ஜனநாயகத்தையும் அந்த ஜனநாயகப் பண்பியல்புகளையும் காப்பாற்றுவதற்காக சிறுபாண்மைக் கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் வரவேற்கத்தக்கவை.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர்களான் ரிசாத் பதீயூதீன் மற்றும் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் கட்சிகள் ஐனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதால் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.

இவ்வாறு ஐனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் ஏனைய கட்சிகளும் இணைந்துள்ளதால் எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்ற போது ஐனநாயகம் மீள நிலைநாட்டப்படக் கூடிய சூழ்நிலையே உள்ளது.

ஆனால் ஏற்கனவே அரசியலமைப்பை மீறியமை அன்றையதினமும் ஏதும் நடைபெறாவிட்டால் இந்த நாட்டில் ஐனநாயகத்தைப் பாதுகாத்து ஐனநாயக ஆட்சி மீண்டுமொருமுறை கொண்டுவரப்படுமென்றார்.

இதே வேளை ஐனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்திருக்கின்றது. அதற்கமைய இரு கட்சிகளுக்குமிடையே பேச்சுக்கள் நடைபெற்று சில இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருக்கின்றன.

அவ்வாறு ஐனநயாக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இணைந்து செயற்படுவது வரவேற்றகத்தக்கது. ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணி தேசிய ரீதியிலான செயற்பாடுகளை அண்மைக் காலமாக முன்னெடுக்கின்ற போது கூட்டமைப்புமு; அவர்களும் இணைந்து செயற்படுவது நல்லவியடமாகவே பார்க்க வேண்டும்.

அதிலும் அரசியலமைப்பை மீறிய சட்டத்திற்கு முரணான ஐனாதிபதியின் செயற்பாட்டிற்கு ஆதரவு கொடுக்காது அதனை எதிர்க்கின்றதென்ற முடிவும் எட்டப்பட்டிருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More