Home பிரதான செய்திகள் இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி

by admin


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் நிறைவில் 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இன்று இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து 322 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ஓட்டங்கள் வழங்கப்பட்டது.

எனினும் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 250 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More