Home சினிமா சர்கார் படத்தின் சர்ச்சையான காட்சிகள் நீக்கம்!

சர்கார் படத்தின் சர்ச்சையான காட்சிகள் நீக்கம்!

by admin



விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரியதாக குறிப்பிடப்பட்ட காட்சிகள் மறுதணிக்கையில் நீக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, நடிகர் விஜய் நடித்த “சர்கார்” திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியானது.இப் படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுப்பட்டது.

ஜெயலலிதாவின் இயற்பெயரான “கோமளவல்லி” எனும் பெயர் வரலட்சுமி நடித்துள்ள வில்லி வேடத்துக்கு வைக்கப்பட்டிருப்பதால் அ.தி.மு.க.வினர் இத் திரைப்படத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டனர். அத்துடன் தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறுவது போன்ற வசனங்களும் இலவச பொருட்களை அள்ளிப் போட்டு தீ வைப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றதால் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளை நீக்க வலியுறுத்தி, நேற்று மாலை தமிழகம் முழுவதும் சர்கார் படத்தை எதிர்த்து அ.தி.மு.க.வினர் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். திரை அரங்குகளின் வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழித்து எறியப்பட்டன. நடிகர் விஜய்யின் கட்-அவுட்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த திரை அரங்குகளில் பாது காப்புக்காக பொலிசார் நிறுத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள கோமளவல்லி என்று அழைக்கப்படும் காட்சியையும், தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறி மிக்சி, கிரைண்டர் தீ வைக்கப்படும் காட்சியையும் மறு தணிக்கையில் தணிக்கை குழுவினர் நீக்கியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More