Home சினிமா மாரி 2 திரைப்படம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வெளியீடு :

மாரி 2 திரைப்படம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வெளியீடு :

by admin



வடசென்னை திரைப்படத்திற்குப் பின்னர், தனுஷ் நடித்துள்ள ‘மாரி 2’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த `வடசென்னை’ திரைப்படம் வெற்றிகரமாக காண்பிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து,  தனுஷ் நடிப்பில் உருவாகிய ‘மாரி 2’ திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷின் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தோமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  தற்போது இப் படத்தின் பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது.  இந்த படத்தின் முதல் சுவரொட்டி (பெர்ஸ்ட் லுக் போஸ்டர்) சில தினங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் விடுமுறை தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி மாரி 2 வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More