Home சினிமா சரோஜா தேவியின் வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா :

சரோஜா தேவியின் வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா :

by admin



என்.டி.ராமராவ் வாழ்க்கைகதை பற்றிய திரைப்படத்தில் சரோஜாதேவி வேடத்தில் நடிப்பதற்கு பிரபல நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.  மறைந்த ஆந்திர முதல்வரும் தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிவருகிறது. இத் திரைப்படம் இரு பாகங்களாக தயாராகி வருகின்றன. இதில் என்.டி.ஆர் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். கிருஷ் படத்தை இயக்குகின்றார்.  என்.டி.ராமராவ் மனைவி பசவதாரம் கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்கிறார்.

இதேவேளை, சந்திரபாபு நாயுடுவாக ராணாவும் கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் நடிக்கிறார்கள். என்.டி.ராமராவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்த சாவித்திரியாக நித்யாமேனனும் ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கின்றனர். அத்துடன் என்.டி.ராமராவ் ஜோடியாக நடித்துள்ள சரோஜாதேவி வேடத்துக்கும் நடிகை தேர்வு நடைபெறுகின்றது.

சரோஜாதேவி தமிழ், கன்னடம், தெலுங்கில் 200இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் இந்திய பட உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசனுக்கு நாயகியாகவும் அதிக படங்களில் நடித்தார். அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்றெல்லாம் பட்டங்கள் பெற்றார்.

என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் சரோஜாதேவி வேடத்தில் நடிக்கும்படி அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து, நடிகை அனுஷ்கா தற்போது உடல் எடை குறைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More