குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. சகோதர இனத்தவர் ஒருவரால் இன்று காலை 8 மணிதொடக்கம் கிளிநொச்சி காவல் நிலையம் அருகில் குறித்த முன்னெடுக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய மக்கள் இன ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். குறிப்பாக 90 வீதமானோர் இன ஒற்றுமையை விரும்புகின்றனர். ஆனால் வடக்கில் குறித்த ஒற்றுமையை சீர்குகை்கும் வகையில் செயற்படுகின்றனர். அிகளவானோர் இந்த ஒற்றுமையை விரும்பும் நிலையில் வடக்கில் சுமந்திரன், சிவாஜிலிங்கம் போன்றோர் ஒற்றுமையை சிதைக்கும் நோக்குடன் செயற்படுவதாக குறித்த போராட்டத்தினை மேற்கொண்ட நபர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு காணப்படும் நிலையை மாற்றியமைத்து, அனைத்து மக்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் ஊடகங்களிற்கு கரு்தது தெரிவித்தார். தென்னிலங்கையில் சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்டோர் அரச சலுகைகளை முழுமையாக அனுபவிப்பதோடு, அரசுடன் நெருக்கமாக உறவாடி வருகின்றனர் எனவும மக்களோ இன்றும் பல்வேறு துன்பங்களுடனேயே வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
;. இவ்வாறான சம்பவங்களை மாற்றியமைத்து, இலங்கையில் அனைத்து இனத்தவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே தான் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முக்கெடுத்துள்ளதாகவும் அவர் இதன்புாது ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
Add Comment