பிரதான செய்திகள் விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி -இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இறுதியில் 1 பந்துக்கு 1 ஓட்டம் எடுக்க வேண்டும் என்ற நிலையில் மனீஷ் பாண்டே ஒரு ஓட்டத்தை பெற்று ஆட்டத்தை முடித்து வைத்த நிலையில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap