இந்தியா பிரதான செய்திகள்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி மாதம் 24-ந் திகதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 7 அடி உயரத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. அந்தச் சிலையில் ஜெயலலிதாவின் முகபாவனையில் இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தநிலையில் ஜெயலலிதாவின் சிலையை மாற்றியமைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர்   இந்த சிலையயை திறந்து வைத்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap