பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட புதிய அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சட்டவிரோதமானது எனத் தெரிவித்த அவர் அதனை பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஓரிரு தினங்களின் பின்புதான் நம்பிக்கையில்லா பிரேரணையாக முன்வைக்க முடியும் எனவு ஆளும் தரப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Spread the love
Add Comment