Home இலங்கை ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை..

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை..

by admin


ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.

ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க மாணவனை சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 10 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதன் போது, மாணவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனால் அவருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையை விதித்த யாழ்ப்பாணம் நீதிவான், மாணவனை அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பித்து தண்டனைக் காலத்தைக கழிக்க அனுமதியளித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More