Home பிரதான செய்திகள் கோலி -ரோகித் சர்மாவை மிஞ்சிய மிதாலிராஜ்

கோலி -ரோகித் சர்மாவை மிஞ்சிய மிதாலிராஜ்

by admin


இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஸ்ட வீராங்கனை மிதாலிராஜ், 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கெதிரான போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளதன் மூலம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை விட அதிக ஓட்டங்களைப் பெற்றுள்ளார் . சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவர் இதுவரை 80 இன்னிங்சில் துடுப்பாடி 17 அரைசதங்களுடன் 2,283 ஓட்டங்கைளப் பெற்று அதிக ஓட்டங்களை எடுத்துள்ளார்.

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 2,271 ஓட்டங்களை எடுத்து முன்னிலை வகிக்கின்றார். இந்திய வீரர்களான ரோகித் சர்மா 2,207 ஓட்டங்களுடனும் விராட் கோலி 2,102 ஓட்டங்களுடனும் காணப்படும் நிலையில் மிதாலிராஜ் தற்போது அவர்களை மிஞ்சியுள்ளார்.

இதேவேளை 35 வயதான மிதாலிராஜ் வீராங்கனைகளின் பட்டியலில் அவர் 4-வது இடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More