இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பெரில் நாளை மாலை 5மணிக்கு பாராளுமன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரியவுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.