பிரதான செய்திகள் விளையாட்டு

ஓய்வு பெறும் அயர்லாந்து கிரிக்கெட் இரட்டை சகோதரிகள் :

அயர்லாந்து கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான சிசிலியா ஜொய்ஸ், இசபெல் ஜொய்ஸ் ஆகிய இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.  தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் ‘பி’ பிரிவின் கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றிருந்தது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 79 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி 7.3 ஓவர்களிலேயே வெற்றி பெற்றிருந்தது.இதனையடுத்து இந்த போட்டியுடன் தாம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இரட்டை சகோதரிகளான 35 வயதான சிசிலியா மற்றும் இசபெல் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap