இலங்கை பிரதான செய்திகள்

“கூம்பியோ” அரசியல் தொலைக்காட்சி நாடகாசிரியர், தமித்த சந்திரசிறி காணாமல்போனார்..

“கூம்பியோ”  என்ற அரசியல் தொலைக்காட்சி நாடகாசிரியர் தமித்த சந்திரசிறி (Koombiyo-editor-Damitha) காணாமல்போயுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தமித்த சந்திரசிறி மூன்று வாரங்களிற்கு முன்னர் காணாமல்போயுள்ளார் என தெரிவித்துள்ள காவற்துறையினர் அனுராதபுரத்தை சேர்ந்த அவர் நாவலயில் தங்கியிருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சந்திரசிறியின் நெருங்கிய நண்பர்  இது குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் , கடந்த 24 ம் திகதி தனது நண்பரை இறுதியாக பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் நிலவரங்களை அடிப்படையாக வைத்து கூம்பியோ தொலைக்காட்சி நாடகத்தை தமிந்த சந்திரசிறி தயாரித்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

A complaint has been lodged with the Welikada Police stating that 40-year-old Damitha Chandrasiri, the editor and script writer of the ‘Koombiyo’ tele drama has been missing for few days.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap