இலங்கை பிரதான செய்திகள்

“தம்பி வந்திட்டானா” “தம்பி வந்திட்டானா” என்ற ஏக்கத்துடனயே மரணித்தார்….

தம்பி வந்திட்டானா? தம்பி வந்திட்டானா? அவனை பார்க்காமல் சாகமாட்டேன் என்று கூறியவர் அந்த ஏக்கத்துடனேயே மரணித்துவிட்டார் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த எழிலனின்( சிசிதரன்) தந்தை கிருஸ்ணப்பிள்ளை சின்னத்துறை.

இன்று 20-11-2018 அன்று மரணமடைந்த எழிலனின் தந்தையின் பூதவுடல் இல 156 விவேகானந்தசகர் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதி நிகழ்வு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை பத்து மணிக்கு இடம்பெறவுள்ளது. என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன  தெரிவித்துள்ளார்

இறுதி காலம் வரை தனது மகள் எழிலன் வருவான் என்றும் அவனை பார்க்காமல் இறக்கமாட்டேன் என்றுக் கூறிக்கொண்டிருந்தவர் என்றும் மகன் மீதான ஏக்கம் இறுதி மூச்சுவரை காணப்பட்டது. இறுதி நேரத்திலும் தம்பி வந்திட்டானா தம்பி வந்திட்டானா என்று கேட்டவாறு இருந்தார் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனனர்.

எழிலனின் தந்தை காலமானார்….


தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின்  தந்தையும், வடக்கு மாகாண மகளிர் விவகார முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனின் மாமனாருமான கிருஸ்ணபிளை சின்னத்துரை நேற்று கிளிநொச்சியில் காலமானார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.