இலங்கை பிரதான செய்திகள்

மாடு வெட்டத் தடை தீர்மானத்தை நீக்குமாறு கோரிக்கை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க மாட்டிறைச்சி சம்பந்தமான உணவுகள் உட்கொள்வோர் உள்ளமையினால் சபை­யால் நிறை­வேற்­றப்­பட்ட ”மாடு வெட்டத் தடை” தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்து தடையை நீக்­கு­மாறு கோரி நல்­லூர் பிர­தேச செய­ல­ர் பிரிவுக்­கு உட்பட்ட 80, குடும்பங்களைச் சேர்ந்தோர் சபை­யி­டம் தமது கையொப்­பங்­கள் அடங்­கிய கோரிக்கையை கைய­ளித்­துள்­ள­னர்.

கடந்த செப்­ரெம்­பர் மாதம் நடை­பெற்ற மாதாந்த அமர்­வில் நல்­லூர் பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­தி­யில் மாட்­டி­றைச்­சிக்­குத் தடை விதிக்­கக்­கோரி உறுப்­பி­னர் மது­சு­தன் கொண்டு வந்த தீர்­மான வரைவு விவா­தத்­தின் பின்­னர் நிறை­வேற்­றப்­பட் டது. இந்த நிலை­யிலேயே அந்தத் தீர்­மா­னத்தைப் மீள்பரி­சீ­லனை செய்து மாட்­டி­றைச்­சிக்கு உள்ள தடையை நீக்­கு­மாறு கோரி 80 குடும்­பங்­களைச் சேர்ந்தவர்கள் கையொப்ப­மிட்டு சபைக்கு கைய­ளித்­துள்­ளனர்.

அவர்­கள் கைய­ளித்­துள்ள மனு­வில், நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­யில் மாட்­டி­றைச்சி உண்­ப­வர்­கள் உள்­ள­னர். அது மட்­டு­மல்­லாது நோயா­ளர்­க­ளான எம்­மில் பல­ருக்கு மருத்துவர்­கள் மாட்­டி­றைச்சி சம்­பந்­த­மான உண­வு­களை பரிந்­து­ரைக்­கின்­ற­னர்.
எனினும் அதனை எம்­மால் பெற்­றுக்­கொள்ள முடி­யா­மல் உள்­ளதன் கார­ண­மாக நாம் எமது பிர­தே­சத்தை விட்டு வெளி­யி­டங்­க­ளுக்குச் சென்று மாட்­டி­றைச்­சியை வாங்க வேண்­டிய சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது.
இத­னால் எமக்கு நீண்ட அலைச்­ச­லும், பண விர­ய­மும் ஏற்­ப­டு­கின்­றது. இது போன்ற அடிப்­ப­டைக் கார­ணி­கள் பல­வற்றை கவ­னத்­தில் கொண்டு சபை­யால் விதிக்­கப்­பட் டுள்ள மாட்­டி­றைச்­சித் தடையை நீக்கி எமது உணவுத் தேவையைப் பூர்த்­தி­செய்து தர­வேண்­டும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள் ளது.

இது தொடர்­பில் சபை­யின் தவி­சா­ளர் தியா­க­மூர்த்­தி­யை கேட்­ட­போது, இந்த விட­யம் தொடர்­பில் உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ள­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது எனவும் அவ­ரின் பதில் கிடைத்­த­வு­டன் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.