பிரதான செய்திகள் விளையாட்டு

உலக கிண்ண மகளிர் 20 ஓவர் போட்டி – அரையிறுதிப் போட்டிகள் நாளை


மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 6வது உலக கிண்ண மகளிர் 20 ஓவர் போட்டியின் அரையிறுதி போட்டிகளில் நாளையதினம் இந்தியா – இங்கிலாந்து அணிகளும் அவுஸ்திரேலியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளும் போட்டியிடவுள்ளன

போட்டியிலிருந்து தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் வெளியேறியுள்ள நிலையில் அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

முதலாவதாக நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா – மேற்கிந்திய தீவுகள் போட்டியிடவுள்ளன. அதனைத் தொடந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் போட்டியிடவுள்ளன.  இந்த அரையிறுதிப் போட்யில் வெல்லும் அணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் போட்டியிட்டு கிண்ணத்தினைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.