மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 6வது உலக கிண்ண மகளிர் 20 ஓவர் போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. இன்று அதிகாலை நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததன் அடிப்படையில் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதனையடுத்து 106 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளமை குறிப்pபடத்தக்கது
Add Comment