வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தின் ஜாங்க்ஜியாகோவ் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலை அருகோ தரித்து நின்ற பல வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்ததுடன், அப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் கடுமையான போராட்டத்தின் பின்னர் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் 38 பாரவூர்திகள் , 12 கார்கள் தீக்கிரையதுடன், வாகனங்களில் இருந்த 22 பேர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment