Home உலகம் சிட்னியில் வரலாறு காணாத கனமழை – ஒருவர் பலி – இருவர் காயம்…

சிட்னியில் வரலாறு காணாத கனமழை – ஒருவர் பலி – இருவர் காயம்…

by admin

 The State Emergency Service is warning people to stay off the roads after the Bureau of Meteorology predicted ‘heavy and intense’ rain in Sydney could result in flash flooding. Photograph: Ryan Pierse/Getty Images

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் இன்று காலை முதல் வரலாறு காணாத மழை பெய்து வருவதாகவும் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை இன்று ஒரே நாளில் பெய்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பல்வேறு இடங்களில் மரங்கள் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் வெளியில் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் சிரமத்துக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து சிட்னி நகரில் உள்ள சுரங்க புகையிரதங்கள் மற்றும் புகையிரதங்கள், மற்றும் , பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கடும் மழை மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடுன் மீட்புப் பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் மீது மரங்கள் முறிந்து விழுந்ததில் இரு காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.

மேலும் மழை தீவிரமாகும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், ; சிறிய நதிகளில் வெள்ளம் வரும் அபாயம் இருப்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More