ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் தன்னை பயமுறுத்த முயற்சிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளர். தனது தனது ருவிட்டர் வலைதளத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
பலர் தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவதுடன், தன்னுடன் கைபேசியில் உரையாட முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தான் மட்டகளப்பிலுள்ள கருணா அம்மான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். மேலும் 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் யார் கருணா அம்மான் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் கருணா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Add Comment