இலங்கை பிரதான செய்திகள்

தாஜூடினின் கொலை – குற்றம் சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் கைது செய்க :


பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை வழக்கு தொடர்பில் குற்றம் சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

நாரஹேன்பிட்டி காவல்நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய சுமித் பெரேரா , முன்னாள் சிரேஷ்ட பிரதிக் காவல்துறை nஅதிபர் அநுர சேனாநாயக்க, மற்றும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர ஆகியோருக்கு எதிரான சாட்சிகளை மறைப்பதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தது சம்பந்தமாக குற்றம் சுமத்த முடியும் என இரகசிய காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்ததனையடுது;தே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு மனிதக் கொலை சம்பந்தமானது எனவும் கொலைச் சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னலையாக்குமாறும் இரகசியப் காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாவிடின் வேறு வழக்கு தொடருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இதற்கு பதிலளித்த இரகசிய காவல்துறையினர் இந்த வழக்கு சம்பந்தமாக இதுவரை 1200 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 22 இலட்சம் தொலைபேசி அழைப்புக்கள் விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த இடத்தால் பயணித்த நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் செயற்கைக்கோள் புகைப்படங்களை பெற்றுக் கொள்வதற்கு நாசாவிடம் உதவி கேட்டுள்ளதாகவும் இரகசிய காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணை சம்பந்தமான அறிக்கையை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 திகதி சமர்ப்பிக்குமாறு வரை அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers