Home இலங்கை யாழ் முஸ்லிம்கள் வீட்டுத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் செலுத்தவேண்டும்

யாழ் முஸ்லிம்கள் வீட்டுத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் செலுத்தவேண்டும்

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீளக்குடியேறிய   முஸ்லிம் குடும்பங்கள் வீட்டுத்திட்டங்களுக்காக விண்ணப்பிப்பதில்  ஆர்வத்துடன்  ஈடுபடுமாறு முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் எஸ்.ஏ.சி முபீன்  தெரிவித்துள்ளார். தற்போதைய மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
 குறிப்பாக யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் வெள்ளைக்கடற்கரை சாவகச்சேரி பிரதேசங்களில் காணிகளைக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் குடும்பங்கள் பல வீட்டுத்திட்டங்களுக்கு உரிய முறையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவில்லை எனத் தெரியவருகின்றது.
அதுமட்டுமன்றி யாழ் மாவட்டத்தில் காணிகளைக் கொண்டிருக்கின்ற அனைவரும் வீட்டுத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்ற செய்தியும் எமக்குத் தெரியவருகின்றது. இதன் மூலம் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்படுகின்ற உதவித்திட்டங்களை அம்மக்கள் இழக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. காணியற்றோர் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க காணிகள் இருந்தும் வீட்டுத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்காதவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பது ஆரோக்கியமற்றது. எனவே இதுவிடயத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
காமல் வீதி மொஹிதீன் மஸ்ஜித் வீதி ஆசாத் வீதி ஜின்னா வீதி போன்ற இடங்களில் பல வீடுகள் இன்னும் இடிபாடுகளுடனேயே காணப்படுகின்றன இவற்றின் உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் இருக்கின்றார்கள் அவர்கள் வீட்டுத்திட்டங்களிற்காக விண்ணப்பிக்க முடியும் ஆனால் இதுவரை அவ்வாறான முயற்சிகள் இடம்பெறாமல் இருப்பதனூடாக குறித்த உதவித்திட்டங்களை இழக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது. எனவே குறித்த காணி உரிமையாளர்கள் வீட்டுத்திட்ட விண்ணப்பத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன.
தற்போது  வழங்கப்படவிருக்கின்ற  பெறுமதியான வீட்டுத்திட்டத்திலாவது முஸ்லிம் முஸ்லீம் மக்கள் விண்ணப்பித்து தமக்கான வீடுகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார்.
பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More