கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை இம்முறை இரத்மலானை விசேட தேவையுடையோர் வித்தியாலயம் மற்றும் தங்கல்ல மாத்தறை சிலாபம் கொழும்பு மகசீன் சிறைச்சாலை போன்றவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
போராதனை போதனா வைத்தியசாலை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றவற்றிலும் சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளது. இதேவேளை நாட்டில், பரீட்சை நடவடிக்கைகளுக்காக 47 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன். 4,561 பரீட்சை நிலையங்களும், 541 பரீட்சை இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment