இலங்கை பிரதான செய்திகள்

பிரதமர் பதவிக்கு ரணிலையே ஐ.தே.க நியமித்துள்ளது


பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவையே ஐக்கியதேசிய கட்சி நியமித்துள்ளது என தெரிவிக்கும் கடிதமொன்றை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீர் காசிம்  , தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

ஐக்கியதேசிய முன்னணி நியமிக்கும் எவரையும் பிரதமராக ஏற்றுக்கொள்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதை தொடர்ந்தே ஹபீர்காசிம் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற குழுவினர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிப்பது என ஏகமனதாக தீர்மானித்துள்ளனர் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடிதம் மூலம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 117 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுள்ளமை உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.