இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

மக்கள் வழக்காற்றியலும் பண்பாட்டுக்கற்கையும் பாடநெறிஉருவாக்கம் – பின்னணி-தேவைப்பாடு.

கி.கலைமகள் – கட்புல தொழில் நுட்பகலைத் துறை…


Folklore என்னும் பதம் நாட்டுப்புறவியல், நாட்டார் வழக்காற்றியல், நாட்டாரியல் போன்ற பலவாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டசொல்லாக காணப்படுகின்றது. Folk என்பதுநாடு, கிராமம், ஊர் என்னும் சொல்லை குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியை தன் வாழ்தல் எல்லையாகக் கொண்டு வாழும் மக்களின் வாழ்வியல், பண்பாடு, நம்பிக்கை, பாரம்பரியம் அனைத்தையும்  (Lore) வழக்காறு என அடையாளப்படுத்தலாம். நாட்டார் என்னும் சொல் குறிப்பிட்ட ஊர் கிராமம் சார்ந்த வரைவிலக் கணத்தை தருவதோடு நாடார், நாட்டார் என சாதியரீதியான அர்த்தத்தினையும் தருவதனால் மக்கள் வழக்காற்றியல் என இங்கு பயன்படுத்தப்படுகின்றது.

இந்தியாவில் தமிழகத்தில் சமூகப்பண்பாட்டுடன் இணைத்துவழக்காறுகளைமுன்வைத்தவராகநா.வானமாமலைவிளங்குகின்றார். மாக்சியத்துடன் இணைத்து பண்பாட்டின் கூறாகபார்க்கத் தொடங்கிய நிலைப்பாடு வழக்காறுகளை ஆய்வுப்பரப்பிற்கு கொண்டு சென்றது. இலங்கையில் சி.விவேலுப்பிள்ளை, பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, ரோசிரியர்சு.வித்தியானந்தன், தமிழருவி.ச.சண்முகசுந்தரம், வி.சி.கந்தையா, மு.ராமலிங்கம், முல்லைமணி, க.கங்கேஸ்வரி, அன்புமணி போன்றோர்களைக் கூறலாம். தொகுப்பு சேகரிப்பு போன்ற வற்றுடன் களாய்வுகள் மூலம் வழக்காறுகளை சேகரித்து பதிப்பித்தனர். கங்கேஸ்வரி கந்தையாவின் ஆடகசவுந்தரி என்னும் உள்ளுர் வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு ஆடகசவுந்தரி என்னும் வரலாற்று நாடகத்தினை உருவாக்கினார். வழக்காறுகள் பற்றியதேடலையும் வாசிப்பினையும் கூர்மைப்படுத்தியகாலமாக இது காணப்படுகின்றது. ஆனால் இதனைத் தொடர்ந்துசமுகவியல்,மொழியியல் துறைகளில் ஒருபகுதியாகபார்க்கப்பட்டதேதவிரதனிப்புலம் சார்ந்தசெயற்பாடுகள் இடம்பெறவில்லைஎன்றே கூறலாம். தொடர்ந்தும் ஏனைய துறைகளுக்குபங்களிப்புச் செய்யும் துறையாகவும் தமிழ் இலக்கியஅறிவுத்தளத்தில் செயற்படும் ஒருவிடயமாகவேஅதன் மொழிரீதியானஅழகியல் ஆய்விற்குஉட்படுத்தப்பட்டுவந்துள்ளது.

உள்ளுர் கலைபண்பாட்டு வடிவத்தினை சமுகப்புரிதலுடனும் கோட்பாட்டுத்தளத்தில் நின்றும் செயற்பட்டகுழுவினரில் மூன்றாவது கண் உள்ளுர் அறிவுதிறன் செயற்பாட்டு நண்பர் குழு முக்கியமானவர்கள். உள்ளுர்உற்பத்தி, உள்ளுர்கலைகளுக்கும் உள்ளுர் உற்பத்திக்குமான உறவுநிலை, இயற்கையுடன் இணைந்து வாழ்தலின் முக்கியத்துவம், சுயமானவன் முறையற்ற வாழ்தலை உள்ளுர்வாழ்தல் முறையில் நின்று 2000 களில் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுதிறன் செயற்பாட்டுநண்பர் குழு முன்வைத்தது. இவர்களின் மாநாடுகள், ஆய்வரங்குகள், மடை போன்ற கலைவிழாக்கள், கூத்துமீளுருவாக்கச் செயற்பாடு, சிறுவர் கூத்தரங்கு போன்றசெயற்பாடுகள் முக்கியமானவை.

சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கரினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் முக்கியமானவை. பாரம்பரிய கலைஞர்களும் பல்கலைக்கழக மாணவர் விரிவுரையாளர்களுடனான உரையாடல்கள், உள்ளுர் வாத்தியமரபிற் கானதுறை உருவாக்கம், உள்ளுர் இசைநடனவடிங்கள் நடன, இசைத்துறையில் இணைக்கப்பட்டல், பாரம்பரியஉணவும் தத்துவமரபும் பாடநெறிபோன்றவற்றைக் கூறலாம். அத்துடன் தொட்டுணராப் பண்பாடு சார்சர்வதேசமாநாடுகள், கருத்தரங்குகள் என்பன உலகத்தரத்திலான செயற்பாட்டாளர்களை பரீட்சயமாக்கியுள்ளன. இத்தகைய செயற்பாடுகள் மக்கள் வழக்காற்றியத்தினை தனிப்புலமாக உருவாக்கும் முக்கியத்துவத்தினை உணர்த்திருக்கிறது. மக்களின் வழக்காற்றினை புரிதல் அதன் பல் தன்மைபற்றிய ஆய்வுகளின் தேவைப்பாட்டினை கூர்மைப்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில் மக்கள் வழக்காறும் பண்பாடும் என்பதுபாரம்பரியகலைகள்-கலைஞர்கள், நம்பிக்கைகள், தொன்மங்கள், புராணங்கள், வாய்மொழிமரபுகள், சடங்குகள், கைவினைக்கலைகள் – கலைஞர்கள், தோரணப்பாரம்பரியங்கள், பாரம்பரியதொழில் முறைகள் – தொழிலாளர்கள், உள்ளுர்அழகியல் கோட்பாடுகள், இசைமரபுகள், உள்ளுர்பாரம்பரிய அரங்குகள், உணவுப்பாரம்பரியங்கள், பழங்குடிமக்களின் பண்பாடு, பண்பாட்டுரிமை. இஸ்லாமியர், பறங்கியர் சமூகப்பண்பாடு, பண்பாட்டுரிமை பயன்பாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் எனஅனைத்தினையும் உள்ளடக்கியதாகஅமைகின்றது.

நாம் நமக்கான மொழியில் பேசுவதுபோல், நாம் நமக்கான பண்பாட்டினை தெரிவுசெய்வதுபோல் எமக்கானகலை எது? அழகியல் எது? எம்மிடையே ஓவியம், சிற்பம், கட்டடப்பாணி என்பன உள்ளதா? அவை எமதுகற்கையில் எவ்வளவு தூரம் உள்வாங்கப்பட்டுள்ளது? அதன் அவசியப்பாடுஎன்ன? இவற்றைஉள் இணைப்பதால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் கேள்விகள் என்ன? போன்றஉரையாடல்கள் அவசியமானவை.

இதன் முதற் கட்டமாக கட்புல தொழில் நுட்ப கலைத்துறையில் மக்கள் கலை (Folk art), வாய்மொழிமரபுகள் (Oral Radiation). உள்ளுர்கலைவரலாறு (Theory), திரைப்படமும் வழக்காறுகளும், அத்துடன் கைவினைக்கலை, புலங்கு பொருட்பண்பாடு, இயற்கைச் சாயமுறைகளும் அவற்றினைமீளவும் பயன்படுத்தல் போன்றபல் பார்வையில் கட்புலத்துறை கற்பித்தலில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இத்துறையில் உள்ளுர் அழகியல் மரபுகள், அதன் நுட்பமுறைகள், உள்ளுர்கலைகளின் வரலாறுகள், என்பன இணைக்கப்பட வேண்டியதேவை உள்ளது. அழகியல், அழகியல் மரபுகள் எனநாம் அதிகமாகப் கற்பவை மேற்கத்தேய குறிப்பாக ஐரோப்பா தழுவியதாகவே காணப்படுகின்றது. இவற்றிக்கு மாற்றான எமக்கானது எது? என்னும் கேள்வி முக்கியமானதாகின்றது. காலனிய நீக்கத்திற்கான யெசற்பாடுகளின் அடிப்படையில் எமது அழகியல் முறை, பாணி, நுட்பம் போன்றவை பற்றியதேடல் அவசியமாகின்றது. நமக்கானபாணிஎது? எதிலிருந்து கட்டமைக்கப் போகின்றோம் போன்ற கேள்விகளும் தேடலைவிரிவுபடுத்தியுள்ளன.

ஆனால் பரவலாக மண்சார்கலைகள் எனப்பேசும் நாம் வழக்காற்றினை ஒருபுலமாக ஏற்கமறுக்கின்றோம். பின்னர்கலைஞர்களை கௌரவிக்கின்றோம், வழக்காறுகள் அழிந்துவருவதாய் அவற்றை சேகரிக்கின்றோம். அவற்றின் அழகியல் பொருண்மை என்பன படித்தவர்களுக்குரியதற்றதாய் காணப்படுவதாக செம்மையாக்கின்றோம் நவீனப்படுத்துகின்றோம். வழக்காறுகளைதங்கள் வாழ்வியலில் தக்கவைக்கும் மக்களை படிக்காதரவாய் பாமரராய் கல்விப்பரபில் அடையாளப்படுத்துகின்றோம். பின்னர்கலை –  கலைஞர்கள் எனகௌரவிக்கின்றோம். இத்தகையமுரண்நிலை சிந்தித்தலுக்குரியது.

மாற்றுப் பார்வை, காலனியநீக்கத்திற்கான முன்னெடுப்பு, எனப் பேசும் நாம் அதற்கான முன்வைப்பாக மக்கள் வழக்காற்றியத்தினை அடையாளப்படுத்துகின்றோம். இதன் தொடர்ச்சியாய் உதிரி உதிரிகளாக செயற்படும் வழக்காறுகள் ஒரு தனித்துறையாக ஆரம்பிக்கப்படும் போது மட்டக்களப்பின் அடையாளமாகவும் கிழக்கிலங்கை மக்கள் வழக்காறுகளை பண்பாட்டினை உரையாடல் தளத்திற்கு கொண்டுவரும் சூழலையும் வழக்காறுகள் சார்செயற்பாட்டாளர்களை புலமையாளர்களையும் உருவாக்கும். எனவே இதன் தேவைப்பாடு கிழக்கிலங்கையில் முக்கியதேவையாக உயர்கல்வி நிறுவகத்தினால் உணரப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

ஆனால் ஒருதுறையாக உள்ளெடுக்கும் போதுமக்கள் வழக்காறும் பண்பாடும் ஒருபுலம்தானா? இதற்கான தேவைப்பாடுஎன்ன? அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு இப் பாடநெறிதேவைதானா? போன்ற காலனிய நீக்கதினை உணராத, உணரத் தலைப்படாத ஒருசமுகத்திற்கு மீண்டும் மீண்டும் பதிலளிக்கும் சாபக்கேட்டிற்கும் மீண்டும் மீண்டும் ஒருபுலம் என அறிமுகம் செய்யும் நிர்ப்பந்தத்திற்கும் அழகியற் கற்கைகள் நிறுவகம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. உயர்கல் விநிறுவகங்களுக்கான சமுகப் பொறுப்பு என்பது அவசியமானது. சமுகத்திற்கான அறிஞர்களை புலமையாளர்களை உருவாக்குவதோடு சமூதாயத்தின் ஆக்கபூர்வமாற்றங்களுக்கு உதவுவதாக உந்துகச்தியாக செயற்படவேண்டிய தேவையும் கடப்பாடும் உயர்கல்வி நிறுவகங்களுக்குண்டு என்பது இங்குநினைவில் கொள்ள வேண்டியவிடயமாகும்.

கி.கலைமகள்,
கட்புல தொழில் நுட்பகலைத் துறை,
சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைநிறுவகம்,
கல்லடி.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.