இலங்கை பிரதான செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனம் வழங்கியவருக்கு தண்டம்

குளோபபல் தமிழ்ச் செய்தியாளர்


சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனத்தை செலுத்த கொடுத்த நபருக்கு 4ஆயிரம் ரூபாய் சாவகச்சேரி நீதிவான் தண்டம் விதித்துள்ளார். சாவக்கசேரி காவல்துறையினரினால் , சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனத்தை செலுத்த வாகனத்தை வழங்கினார் என குற்றம் சாட்டி வாகன உரிமையாளருக்கு எதிராக நேற்று முன்தினம் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , தன் மீதான குற்றசாட்டை வாகன உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து 4ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிவான், கடுமையாக எச்சரித்து அவரை விடுவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers