Home உலகம் கியூபா மக்களுக்கு 3ஜி நெட்வேர்க் சேவை :

கியூபா மக்களுக்கு 3ஜி நெட்வேர்க் சேவை :

by admin


கியூபா தனது நாட்டு மக்களுக்கு 3ஜி நெட்வேர்க் சேவையை வழங்க உள்ளது. இதுவரை அந்நாட்டில் அரசு ஊடகவியலாளர்களுக்கும், வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கும் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு வந்தது. எனினும் இந்த சேவையை அனைவரும் பெற முடியாத அளவுக்கு அதன் கட்டணம் உயர்வாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 600 எம்.பி டேட்டாவின் விலை 7 டொலர்கள் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

மக்கள் இணையத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவே இதுவரை 3ஜி சேவையை வழங்காமல் அந்நாடு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாட்டு விடுதிகள் மற்றும் அரசால் நடத்தப்படும் மன்றங்களுக்கு மட்டுமே இணைய சேவை வழங்கப்பட்டு வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More