சினிமா பிரதான செய்திகள்

பாகுபலி ராஜமவுலியின் இயக்கத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்


பாகுபலி திரைப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சீதை கதாபாத்திரத்தில் நடிகின்றார்.   ‘பாகுபலி’ திரைப்படத்துக்குப் பின்னர்,ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்  ராஜமவுலி. இன்னமும் பெயரிடப்படாத இத் திரைப்படம் தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என அழைக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் 19ஆம் திகதி இத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்றதகவல்கள் கூறுகின்றன. ராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், கீர்த்தி சுரேசிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers