இலங்கை பிரதான செய்திகள்

மைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே! யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸ என அனைவரையும் இனவாதிகளே என்றும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு நலன் கிட்டாது என்று ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் காங்கிரசின் மன்னார் மாவட்டக் காரியாலயம் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு எதனை செய்துள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார்.

சமஷ்டியை தருகின்றோம் என்றார்கள், வடக்கு கிழக்கை இணைக்கின்றோம் என்றார்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்றோம் என்றார்கள், காணாமல் போனவர்களை கண்டு பிடித்துத் தருகின்றோம் என்றார்கள் ஆனால் ஒன்றுமே நிறைவேறியதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்தும் ஊழல்களிலேயே நிறைவடைந்துள்ளதாகவும் இந்த நல்லாட்சி வந்து மூன்று வருடங்களில் மத்திய வங்கியில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும் பிரபா கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers