இலங்கை பிரதான செய்திகள்

ரணிலுக்கு ஆதரவு குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன்று முடிவு

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக கொண்­டு­வ­ரப்­படும் நம்­பிக்கை பிரே­ர­ணையை ஆத­ரிப்­பதா இல்­லையா என்­பது குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன்­று­காலை கூடி முடி­வொன்­றினை எடுக்­க­வுள்­ளது.  எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மையில் இன்­று­காலை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழு கூடி இது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தை மீண்டும் கொண்­டு­வ­ரு­வ­தற்கும் அந்த முன்­ன­ணி­யினால் பிரே­ரிக்­கப்­படும் ஒரு­வரை பிர­த­ம­ராக நிய­மிப்­ப­தற்கும் தாம் ஆத­ரவு வழங்­கு­வ­தாக 14 கூட்­ட­மைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெ­ழுத்­திட்டு ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யி­ருந்­தனர்.  இந்த நிலையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வான பிரே­ர­ணைக்கு கூட்­ட­மைப்­பினர் ஆத­ரவு வழங்­கு­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap