Home இலங்கை அம்பாந்தோட்டையில் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்குமிடையே மோதல் – ஒருவர் பலி

அம்பாந்தோட்டையில் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்குமிடையே மோதல் – ஒருவர் பலி

by admin


அம்பாந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்றிரவு காவல்துறையினருக்கும் பொது மக்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்தபகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் இடமொன்றை காவல்துறையினர் சுற்றிவளைக்க முற்பட்ட போது காவல்துறையினர் மீது மேற்கொண்ட தாக்குதலையினையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இதனால் நான்கு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து அப் பகுதிக்கு பாதுகாப்பு நடவடிக்கைக்காக விசேட காவல்துறை அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டு மக்களை அவ் விடத்திலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More