உலகம் பிரதான செய்திகள்

ஏமனுக்கான இராணுவ உதவியை மீளபெறும் தீர்மானம் அமெரிக்க செனட்டில் நிறைவேறியது…

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை சம்பவத்தில் சவூதி அரேபியாவை குற்றம் சுமத்தும் வகையில், ஏமனில் நடந்து வரும் போரில் அந்நாட்டுக்கான ராணுவ உதவியை திரும்ப பெறும் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை வாக்களித்துள்ளது. அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ‘1973 போர் அதிகாரங்கள்’ சட்டத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட முதல் வாக்கெடுப்பு இதுவாகும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சவூதியுடனான உறவு பாதிக்கப்படும் எனத் தெரிவித்தாலும், அவர்களது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே தீர்மானத்திற்கு ஆதரவாக 56-41 என்ற கணக்கில் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அதன் வெளிநாட்டு ராணுவ செயல்பாடு முடக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டாகியுள்ளது.

எனினும் இந்த தீர்மானம் ஒருவித கண்துடைப்பாக பார்க்கப்படுவதால் இது சட்டமாக மாற்றப்படாது என்றே கருதப்படுகிறது. அரபு நாடுகளிலேயே அதிக வறிய நாடான ஏமனில் குறைந்து வரும் எண்ணெய் மற்றும் தண்ணீர் வளம் காரணமாக ஓரு வருடமாக அரச படையினருக்கு கவுத்தி போராளிகளுக்கும் இடம்பெற்றுவரும் உள்ளநாட்டுப் போர் காரணமாக அந்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு சிதைவடைந்து பொருளாதாரம் ஸ்தம்பித்துவிட்டது.  அங்குள்ள 26 மிலியன் மக்கள்தொகையில் குறைந்தது 80 சதவீதத்தினராவது, உணவு உதவியை எதிர்நோக்கும் நிலையில் இருக்கின்றனர். மேலும் இந்த மோதலினால்  ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 2.5 மில்லியன் பேருக்கும் மேற்பட்டவர்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்த நிலையில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.