இலங்கை பிரதான செய்திகள்

வடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.வடமராட்சி பகுதியில் முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் வடக்கை சேர்ந்த வைரமுத்து இராசரத்தினம் (வயது 50) என்பவரே உயிரிழந்தவராவர்.

விபத்தில் உயிரிழந்த நபர் நேற்று வியாழக்கிழமை இரவு மாலு சந்தியை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , முச்சக்கர வண்டியுடன் விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு மந்திகை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.