மட்டக்களப்பு வவுணதீவில் காவல்துறையினர் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது . தமிழர் ஐக்கிய சுதந்திர கூட்ட்டமைப்பின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது
கடந்த 30 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட இரு காவல்துறையினரினதும் கொலைக்கு நீதி வேண்டியும் உடனடியாக கொலையாளிகளை கைது செய்யக் கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment