Home பிரதான செய்திகள் நியூசிலாந்துக்கெதிரான முதலாவது இன்னிங்சில் இலங்கை 282 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது இன்னிங்சில் இலங்கை 282 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

by admin

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் 282 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தததன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக கருணாரத்ன 79 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 83 ஓட்டங்களையும் திக்வெல்ல ஆட்டம் இழக்காது 80 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். இதனையடுத்து நியூசிலாந்து அணி முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More