இலங்கை பிரதான செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக ஏக்கநாயக்க மிண்டும் நியமனம்…

பிரதமராக இன்று காலை பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பீ. ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 3​ஆவது தடவையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாகப் பிரிவில் ஓய்வுப் பெற்ற அதிகாரியான இவர், குறித்த துறையில் 30 வருடங்கள் அனுபவமிக்கவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பாடம் தொட​ர்பில் சிறப்பு பட்டதாரியுமாவார்.

அத்துடன் ஏக்கநாயக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் வீட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதானியாக செயற்பட்டுள்ளதுடன், மலேசியா மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகங்களிலும் கடமையாற்றியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.