இந்தியா பிரதான செய்திகள்

மும்பை – அந்தேரி இ.எஸ்ஐ மருத்துவமனையில்  தீவிபத்து – 5 பேர் பலி…


இந்திய மகாராஷ்டிராவின் அந்தேரியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் அந்தேரி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ ஒனயில்,  பலர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்தேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று மாலை 4 மணியள்வில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 100க்கு மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த தீவிபத்தில் 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

தகவலறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று,  போராடி தீயை அணைத்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.