மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ் மற்றும் அந்நிறுவனனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கைகளை அன்றைய தினமே நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், குற்றபுலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Add Comment