குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சி காலநிலையில் மாற்றம் அதிக பனிமூட்டம் நிலவுகிறது கடந்த சில நாட்களாக கிளிநொச்சி கால நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் கால நிலை தற்போது அதிக பனி மூட்டத்துடன் காணப்படுகிறது. காலை ஏழு மணியை கடந்தும் பிரதேசங்கள் பனிமூட்டம் நிறைந்ததாக காணப்படுகின்றது.
காலை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காண முடியாத நிலையும் ஏற்பட்டதோடு வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி செல்வதையும் அவதானிக்க முடிந்தது. அத்தோடு காலையில் நடமாடிய மக்கள் பெரும் சிரமப்பட்டனர். இதேவேளை, அதிகாலையில் கடுமையான குளிர் நிலையும் தொடர்கிறது.
Spread the love
Add Comment