பெரும்பான்மைக்கு அமைய செயற்படுவதே இந்நாட்டின் சம்பிரதாயம் என சபாநாயகர் கூறியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவர் ஆனதில் தமக்கு பிரச்சினை இல்லை என குறிப்பிட்ட இரா. சம்பந்தன், அவர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் இருப்பாரா என்பதே பிரச்சினை எனவும் கூறினார்.
கொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாக சுட்டிக்காட்டியதுடன், நாட்டில் பெரும்பான்மையை நிலைநிறுத்துகின்ற தீர்மானமாக இதனைக் கருதுவதாகவும் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.
Spread the love
Add Comment