சினிமா பிரதான செய்திகள்

நடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் முத்தப்பா காலமானார்

பிரபல ஒப்பனையாளரும் நடிகர் ரஜினியின் பிரத்தியேக ஒப்பனையாளருமான முத்தப்பா இன்று காலமானார். அவர் தனது 75வது வயதில் இன்று காலை காலமானார். ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு முதன்முதலாக ஒப்பனை செய்த இவர், கமல்ஹாசனின் முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ உள்பட பல படங்களில் ஒப்பனையாளராகப் பணியாற்றியுள்ளார்.

‘ஏவிஎம்’ முத்தப்பா எஎன்ற பெயரை தென்னிந்திய சினிமாவில், தெரியாதவர்கள் இருக்க முடியாது. அப்போதைய முன்னணி இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் சிபாரிசுடன், சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்பன் செட்டியார் அவர்களால் ஒப்பனையாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர் முத்தப்பா.

60 ஆண்டுகளாக நாயகன் மற்றும் நாயகிகளுக்கு ஒப்பனை செய்து அறியப்பட்ட முத்தப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராஜ்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களிடம்  பணியாற்றியுள்ளார்.

ஒரு கால கட்டத்தில் ரஜினியின் பிரத்தியேக ஒப்பனையாளராக மாறி அவரிடம் மட்டுமே பணியாற்றினார். அத்துடன் ரஜினி நடித்த சில படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துமுள்ளார்.

புகழ்பெற்ற  ஒப்பனையாளராக அறியப்பட்ட  முத்தப்பா இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு திரையுலைகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

image.png

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.