பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் சமனிலை


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.  நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்; நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 282 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 578 ஓட்டங்களைப் பெற்று 296 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து 296 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றிருந்தது.

சிறப்பாக ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 116 ஓட்டத்துடனும், மத்தியூஸ் 117 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது இலங்கை அணிக்கு வலு சேர்த்தனர்.

இந்தநிலையில் போட்டியின் இறுதியும் ஐந்தாவதும் நாளான இன்று துடுப்பெடுத்தாடி வர மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
. இவ் விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.