Home இலங்கை கிளிநொச்சியில் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுப்பு…

கிளிநொச்சியில் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுப்பு…

by admin

கிளிநொச்சி படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த 45 ஏக்கர் காணி இன்று 19-12-2018 விடுவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளே இன்றைய தினம் இராணுவத்தினரால் மாவட்ட அரச அதிபரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி படைகளின் ஒத்துழைப்பு நிலையத்தில் காலை பத்து மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய 40 ஏக்கர் காணி, கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடமும் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய 5 ஏக்கர் காணிக்குரிய ஆவணங்கள் முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடமும் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரால்ப்நுகரவினால் கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவ்டடத்தில் கரைச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, துணுக்காய் பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட முல்லைத்தீவு காணிகள் எதிர்வரும் 27 வடக்கு மாகாண ஆளுநர் மூலம் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என முல்லைத்தீவு அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.  அத்தோடு கிளிநொச்சியிலும் விரைவில் குறித்த காணிகளை ஆளுநர் மூலம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி அரச அதிபரும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.