Home இலங்கை முல்லைத்தீவு தெராவிலில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு…

முல்லைத்தீவு தெராவிலில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு…

by admin

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில் காட்டுப்பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (17) மீட்கப்பட்டுள்ளது

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற முல்லைத்தீவு காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ராங்கி செல்-1 மிதிவெடிகள் -5 81 மில்லிமீட்டர் எறிகணை -01 81வகை மோட்டர் குண்டு -2 கிறிஸ்ரி செல் -02 ஆர் பி ஜி -1 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பிரதேச கட்டளை அதிகாரி உதவி காவல்துறை அதிகாரி பியனந்தவினது ஆலோசனைக்கு அமைய முல்லைத்தீவு காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதான காவல்துறை அதிகாரி டி எப் யு கே அபேரத்ன தலைமையில் உதவி காவல்துறை பரிசோதகர் எந்துலால் காவல்துறை சாஜன்ட் 35259 பிரசன்ன காவல்துறை கொஸ்தாபல்கலான 90769 பண்டார 11289 ஜஜசுந்தர 68285 சுரங்க 90585 ரத்னாயக்க உள்ளிட்டவர்களால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More