இலங்கை பிரதான செய்திகள்

யாழில் புகையிரத விபத்துக்கள்- ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத்துடன் யாழில் லான்ட்மாஸ்ரர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு அருகில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது. அதன் போது லான்ட்மாஸ்ரர் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

அதேவேளை நேற்றைய தினம் செவ்வாய்கிழமை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் விபத்துக்கு உள்ளான ஒருவர் தனது வலது கையை இழந்த நிலையில் ஆபத்தான நிலைமையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழ். அரியாலையை சேர்ந்த எஸ்.லோகேஸ்வரன் (வயது 59) எனும் நபர் நேற்றைய தினம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் விபத்துக்கு உள்ளானர்.

அதன் போது அவரது வலது கை துண்டாடப்பட்டதுடன் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்த மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துண்டாடப்பட்ட கையினையும் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அதனை சத்திர சிகிச்சை மூலம் பொருத்த முடியாத நிலை காணப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link