கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்படடுள்ளது.
இரணைமடு குளத்து நீர் வெளியேறி இப் பகுதி ஊடாக கடலை சென்றடைவது வழக்கமானது. இம்முறை வழமைக்கு அதிகமான மழை வீழ்ச்சி மற்றும் நீர் வரத்து காரணமாக இப் பகுதி வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது.
வெள்ள அனர்த்த பணிகளின் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்குள் தீடீரென வெள்ளம் புகுந்தது. அங்கிருந்த உத்தியோகத்தர்கள் கடற்படையினரின் உதவியுடன் படகு மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை கண்டாவளையில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தமை காரணமாக மக்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் மக்கள் உத்தியோகத்தர்களோ, மீட்புப் பணியாளர்களினதோ உதவி இன்றிய நிலையில் பாடசாலைக் கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
Add Comment